Wednesday, June 19, 2013

கல்லூரியில் உதவிப் பேராசிரியர் பணி

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியும், திறமையும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உதவிப் பேராசிரியர் பணி
மொத்த காலியிடங்கள்: 1093
காலியிடங்கள் விவரம்: தமிழ்த்துறை - 80, ஆங்கிலத்துறை - 150, கணிதத்துறை - 140, இயற்பியல் துறை - 110, வதியியல் துறை - 100, தாவரவியல் திறை - 65, விலங்கியல் துறை - 60, கணினித்துறை - 100, வரலாற்றத்துறை - 80, பொருளாதாரத் துறை - 60, வணிகவியல் துறை - 80 இடங்கள் உள்பட மேலும் பல துறைகளுக்கு திறை வாரியாக காலியிடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 55 சதவிகிதம் மதிப்பெண்களுடன் முதுகலை தேர்ச்சியுடன் யு.ஜி.சியின் ஏதாவதொரு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது முதுகலைத் தேர்ச்சியுடன் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: இந்தத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல்கட்டமாக பணி அனுபவத்துக்காக 15 மதிப்பெண்களும், முதுகலையிலும் யு.ஜி.சி தேர்வுகளிலும் பெற்றிருக்கும் தேர்ச்சிகளுக்கு 9 மதிப்பெண்களும் சான்றிதழ்கள் அடிப்படையில் வழங்கப்படும். இரண்டாவது கட்டமாக, முதல்கட்டத்தில் வாங்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்முகத் தேர்வு நடக்கும். நேரமுகத் தேர்வுக்கு 10 மதிப்பெண்கள். மொத்தமாக இரண்டு கட்ட தேர்வுக்கும் 34 மதிப்பெண்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.07.2013
மேலும் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு தொடர்பான முழுமையான விவரங்கள் அறிய www.trb.tn.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.