Monday, June 17, 2013

விமான நிலையங்கள் ஆணையத்தில் ஜூனியர் அசிஸ்டென்ட்

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் காலியாக உள்ள 245 ஜூனியர் அசிஸ்டென்ட் காலியிடங்களுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 10ம் வகுப்பு அல்லது பிளஸ் 2 படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பணி: ஜூனியர் அசிஸ்டென்ட் (தீயணைப்பு துறை): என்.இ.-4. 

மொத்த இடங்கள்: 245 (பொது-122, ஓபிசி-78, எஸ்சி-22, எஸ்டி-23). 

சம்பளம்:
 ரூ.12,500- 28,500 மற்றும் இதர படிகள். 

தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 50 சதவீத மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல்/ ஆட்டோமொபைல்/ தீத்துறை ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் 3 ஆண்டு டிப்ளமோ அல்லது 50 சதவீத தேர்ச்சியுடன் பிளஸ் 2. 

வயது: 30.5.2013ன்படி 30 வயதுக்குள். எஸ்சி., எஸ்டி.யினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசியினருக்கு 3 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

டிரைவிங் தகுதிகள்: கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். அல்லது ஏப்.30க்கு முன்பாக ஓராண்டு செல்லத்தக்க வகையில் மிதரக வாகன ஓட்டுனர் உரிமம் அல்லது இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

விரும்பத்தக்க தகுதிகள்:
 பிளஸ் 2வில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திருப்பது, என்சிசி ‘பி’ சான்றிதழ், உள்நாட்டு விமான போக்குவரத்து/தொழிற்சாலைகளில் தீயணைப்பு துறையில் பணியாற்றிய முன்அனுபவம், ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியாவின் தீத்தடுப்பு பயிற்சி படிப்பு படித்திருப்பது, நாக்பூர் தேசிய தீயணைப்பு சேவை கல்லூரியில் சப் பயர் ஆபீசர் கோர்ஸ் படித்திருப்பது ஆகியவை விரும்பத்தக்க தகுதிகள்.

உடல் தகுதி: 
இரு கண்களிலும் 6/6 என்ற அளவில் பார்வைத் திறன் இருக்க வேண்டும். கிட்டப்பார்வை கண்ணாடி இல்லாமல் இரு கண்களில் என்.5 என்ற அளவில் இருக்க வேண்டும். நிறங்களை பகுத்தறியும் திறன் இருக்க வேண்டும்.

உயரம்: 167 செ.மீ.க்கு குறையாமல் இருக்க வேண்டும். மார்பளவு: சாதாரண நிலையில் 81 செ.மீ., விரிவடைந்த நிலையில் 86 செ.மீ. இருக்க வேண்டும்.

எடை: 55 கிலோவுக்கு குறையாமல் இருக்க வேண்டும். செவித்திறன், பேச்சுத்திறன் ஆகியவை இயல்பான நிலையில் இருக்க வேண்டும்.

எழுத்துத்தேர்வு, உடல் திறன் தேர்வு, டிரைவிங் தேர்வு, உடல் வலிமை தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்ப தாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தமிழ்நாட்டில் கோவையில் மட்டும் எழுத்து தேர்வு நடைபெறும். ஆந்திராவில் விசாகபட்டினம், கேரளாவில் திருவனந்தபுரம், கர்நாடகாவில் பெங்களூர் ஆகிய நகரங்களிலும் தேர்வு நடக்கிறது. 

விண்ணப்ப கட்டணம்: ரூ.100. இதை சென்னையில் மாற்றத்தக்க வகையில் Airports Authority of India  என்ற பெயருக்கு டிடி எடுக்க வேண்டும். எஸ்சி., எஸ்டியினர்,  பெண்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. மாதிரி விண்ணப்பத்தைwww.airportsindia.org.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

THE REGIONAL EXECUTIVE DIRECTOR,
Airports Authority of India,
Southern Region, Chennai 600027.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: மே 30.