Monday, June 17, 2013

டெல்லி மெட்ரோ ரயில் கழகத்தில் 370 பணியிடங்கள்

மத்திய அரசு மற்றும் டெல்லி மாநில அரசின் கீழ் செயல் படும் டெல்லி மெட்ரோ ரயில் கழகத்தில் காலியாக உள்ள சீனியர் சிஸ்டம் அனலிசிஸ்ட், ஜூனியர் இன்ஜினியர், மெயின் டெய்னர் பணிகளில் மொத்தம் 370 இடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். 



1. சீனியர் சிஸ்டம் அனலிசிஸ்ட்: 11 இடங்கள். தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் பி.இ. அல்லது எம்சிஏ அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி.
2. ஜூனியர் இன்ஜினியர்  (எலக்ட்ரிக்கல்): 77 இடங்கள். தகுதி: எலக்ட்ரானிக்ஸ் அல்லது எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பாடத்தில் 3 ஆண்டு டிப்ளமோ. 
3.ஜூனியர் இன்ஜினியர் (எலக்ட்ரானிக்ஸ்): 47 இடங்கள். தகுதி: எலக்ட்ரானிக்ஸ் அல்லது எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பாடத்தில் 3 ஆண்டு டிப்ளமோ. 
4. ஜூனியர் இன்ஜினியர் (மெக்கானிக்கல்): 13 இடங்கள்.  தகுதி: மெக்கானிக்கல் பாடத்தில் 3 ஆண்டு டிப்ளமோ.
5. ஜூனியர் இன்ஜினியர் (சிவில்): 16 இடங்கள். தகுதி: சிவில் பாடத்தில் 3 ஆண்டு டிப்ளமோ. வயது 1.1.2013ன்படி 18 முதல் 28க்குள்.
6. மெயின்டெய்னர்: 206 இடங்கள். தகுதி: எலக்ட்ரிக்கல்/பிட்டர்/ எலக்ட்ரானிக்ஸ்/ ரெப்ரி ஜிரேஷன், ஏசி மெக்கானிக்கல் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் ஐடிஐ.

விண்ணப்ப கட்டணம்: பொது, ஓபிசியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.375, எஸ்சி., எஸ்டியினர் ரூ.125 ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஏதேனும் ஒரு கிளையில்32091518042 என்ற கணக்கில் செலுத்த வேண்டும்.

எழுத்து தேர்வு, நேர்முக  தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். www.delhimetrorail.com என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 

பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி: 

DMRC LIMITED, Post Bag No.9, LODHI ROAD POST OFFICE, NEW DELHI 110 033.

ஆன்லைனில் விண்ணப் பிக்க கடைசி நாள்: மே 16.

பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்:
 மே 28.